கட்டார் வாகன விபத்தில் அல்வாய் இளைஞர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்-

கட்டார் நாட்டில் தொழில் நிமிர்த்தம் சென்று 26 ஆம் நாளில் வாகன விபத்தில் அல்வாய் மனோகரா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

நவக்கிரியை சொந்த இடமாக கொண்ட குறித்த இளைஞர் அல்வாய் மனோகரா பகுதியில் மூன்று வருடங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்துள்ளார்.

ஒரு பெண் பிள்ளையின் தந்தையான குறித்த இளம் குடும்பஸ்தர் தொழில் நிமிர்த்தம் கட்டார் நாட்டுக்கு சென்ற நிலையில் வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார.;

இந்த விபத்து சம்பவத்தில் டிபில்ஸ்குமார் துவிகரன் (வயது 24) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இறுதிக்கிரியைகள் இடம் பெற்று தகனம் செய்யப்படவுள்ளது. இச் சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.