இனிய நந்தவனத்தால் கோட்டைக் கல்லாறு நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு
மட்டக்களப்பு கோட்டைக்கல்லாற்றில் உள்ள நூலகத்துக்கு கடந்த வருடம் சுவிஷ் தமிழ் இலக்கியச் சங்கத் தலைவர் கல்லாறு சதீஷின் வேண்டுகோளில் வருகை தந்த இனிய நந்தவனம் ஆசிரியர் சந்திரசேகரம் ,கல்லாறு சதீஷின் வேண்டுகோளினை ஏற்று 1000 தமிழ் நூல்களை இந்த நூலகத்துக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
புலம்பெயர் படைப்பாளிகள், மலேசியப் படைப்பாளர்கள் உட்பட பலர் எழுதிய பெறுமதி மிக்க நூல்களை ஒரு புத்தகப் பதிப்பாளர் அன்பளிப்புச் செய்துள்ளமை மிகப்பெரிய கொடையாக இருப்பதாக இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 2 இலட்சம் இந்திய ரூபாய் பெறுமதியான இந்த நூல்களைத் திருச்சியிலிருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கும் பணியினையும் நந்தவனம் சந்திரசேகரன் முன்னெடுத்துள்ளார்.
இந்த நூல்கள் கல்லாறு சதீஷின் திட்டமிடலின் படி கோட்டைக்கல்லாறு நூலகத்துக்கு அன்பளிப்பாக வழங்கி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.