மூன்று குழந்தைகளை புனித யாத்திரைக்காக வீட்டில் தனியாக விட்டு சென்ற பெற்றோர் கைது

குளியாப்பிட்டி பகுதியில் மூன்று பிள்ளைகளையும் வீட்டில் தனிமையில் விட்டுவிட்டு நேர்த்திக் கடனை நிறைவேற்றுவதற்காக ஸ்ரீ பாத மலைக்கு புனித யாத்திரை சென்ற பெற்றோரை குளியாப்பிட்டி பொலிஸாரால் இன்று புதன்கிழமை கைது செய்துள்ளனர்.

குளியாப்பிட்டி டீகல்ல பிரதேசத்தில் உள்ள வீட்டில் தனிமையில் விடப்பட்ட மூன்று குழந்தைகளும் எட்டு, ஐந்து மற்றும் மூன்று வயதுடையவர்கள் என தெரியவருகின்றது.

பொலிஸ் அவசர சேவை 119 ஊடாக பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட தகவலின் பேரில் மூன்று குழந்தைகளையும் பொலிஸார். பொறுப்பேற்றனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தனிமையில் இருக்கின்றோம் என்ற அச்சத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கதவை உடைத்து அவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மூன்று குழந்தைகளுக்கும் பிஸ்கட், பாண் போன்றவற்றை வீட்டில் வாங்கி வைத்து விட்டு, பெற்றோர்கள் புனித யாத்திரை சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

புனித யாத்திரையில் இருந்து வீடு திரும்பிய பெற்றோரை பொலிசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் தாயை வைத்து குழந்தைகளை வைத்தியசாலையில் பராமரிக்க வைத்துள்ளனர். சந்தேகத்தின் பேரில் பெற்றோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.