
கொட்டாஞ்சேனையில் துப்பாக்கி பிரேயோகம் : ஒருவர் படுகாயம்
கொழும்பு – கொட்டாஞ்சேனை ஜிந்துபிட்டிபகுதியில் இன்று புதன்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தப்பிச் சென்றவர்களில் ஒருவர் மோட்டார் சைக்கிளுடன் கொழும்பு கரையோர பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
ஆட்டுப்பட்டித் தெரு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜோஜ்ராஜ் தனுஷ்ராஜ் வயது (26) என்பவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
