
இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தாய்வழி உ றவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதர வகையில் சிறு சிறு சங்கடங்கள், வீண் செலவுகளும் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மாலையில் எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாக வாய்ப்புண்டு. விநாயகர் வழிபாடு நலம் சேர்க்கும்.
மனதில் தெய்வபக்தி அதிகரிக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும்..சிலருக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்க வாய்ப்பு உண்டு. மாலையில் உறவினர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்த வேண்டிய உதவிகள் கிடைக்க வாய்ப்புண்டு. அம்பிகை வழிபாடு சிறப்பான பலன்களைத் தரும்.
புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். சிலருக்கு வீட்டில் தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படக்கூடும். பிற்பகலுக்கு மேல் எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைகக்கூடும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படக் கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கலில் உரிய கவனம் தேவை. திருமால் வழிபாடு நலம் சேர்க்கும்.
புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சகோதரர்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள். அவசியம் ஏற்பட்டால் தவிர வெளியில் செல்வதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பங்குதாரர்கள் அனுசரணையாக இருப்பார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபட தடைகள் விலகும்.
எதிர்பார்க்கும் காரியங்கள் சாதகமாக முடியும். ஆனால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். தாயின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். பிற்பகலுக்கு மேல் வீண் செலவுகள் மன சஞ்சலம் ஏற்படுத்தும். வியாபாரத்தில் சக வியாபாரிகளிடம் இணக்கமான போக்கைக் கடைப்பிடிப்பது நல்லது. இன்று நரசிம்மரை வழிபடுவது சிறப்பு.
பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். தொலைதூரத்திலிருந்து நீண்டநாள்களாக எதிர்பார்த்த நல்ல தகவல் இன்று வந்து சேரும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும். நிலுவையில் இருந்த பணம் கிடைக்க வாய்ப்புண்டு. புதிய தொழில் முயற்சிகளை ஆலோசிக்கலாம். மகாலட்சுமி வழிபாடு மகிழ்ச்சி தரும்.
மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கியமான முடிவு ஒன்றை துணிச்சலுடன் எடுப்பீர்கள். வீட்டில் கலகலப்பான சூழ்நிலை காணப்படும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பிள்ளைகள் கேட்டதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர்கள். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். வியாபாரிகளுக்கு விற்பனை சூடுபிடிக்கும். லாபமும் அதிகரிக்கும். பைரவரை வழிபடுவது நன்று.
வழக்கமான பணிகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். பிற்பகலுக்கு மேல் உறவினர்கள் வழியில் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படும். கணவன் – மனை விக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும். சகோதரர்களுக்காக செலவு செய்ய நேரிடும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் பணியாளர்களிடம் கடுமை காட்ட வேண்டாம். விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. முருகப்பெருமான் வழிபாடு நன்று.
மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளவேண்டாம். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் ஏற்படும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமை அவசியம். பெரியவர்களுடன் அனுசரித்துச் செல்லவும். போட்டியாளர்களால் தொழிலில் சிறு நெருக்கடி ஏற்பட்டு நீங்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்று.
மனதில் தைரியம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். தந்தை வழி உறவினர்களால் காரிய அனுகூலம் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். வாழ்க்கைத்துணை மூலம் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. பழைய சரக்குகளை விற்றுத்தீர்க்க வாய்ப்புகள் உண்டாகும்.
குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப்போங்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்சனைகள் வந்து விலகும். கவனம் தேவைப்படும் நாள்.
எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சகோதரர்கள் பணம் கேட்டு வருவார்கள். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். எதிரிகளால் பிரச்சனை ஏற்படக்கூடும் என்பதால், கவனமாக இருக்கவும். நீங்கள் கொடுத்த கடன் தொகை திரும்பக் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரிகளுக்கு வரவேண்டிய பாக்கித் தொகை வசூலாக வாய்ப்புண்டு. சிவபெருமான் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும்.
