சம்மாந்துறை ஜமாலியா பாடசாலைக்கு மிக நீண்டகால தேவை வழங்கி வைக்கப்பட்டது

-செந்நெல் கிராமம் நிருபர் சிஜாஸ்-

சம்மாந்துறை ஜமாலியா பாடசாலைக்கு மிக நீண்டகால தேவை ( Bodium) வழங்கி வைக்கப்பட்டது, இத் தேவையினை நிவர்த்தி செய்யும் முகமாக பாடசாலைக்கு புதிதாக கடைமையேற்ற அதிபர் A.M.றிஸ்வானிடம்   பாடசாலையின் நன்மை கருதி இவ் உபகரணத்தினை ஜமாலியா பாடசாலையின் முன்னாள் அபிவிருத்தி நிறைவேற்று குழு செயலாளர் M.I.M. றிஸ்விகான் மற்றும் உறுப்பினர் M.S முனாஸ் ஆகியோரினது சொந்த நிதியினூடாக  நேற்று திங்கட்கிழமை  பாடசாலையினுடைய அதிபர் A.M. றிஸ்வானிடம் வழங்கி வைக்கப்பட்டது

இந் நிகழ்வில்  ஊரின் உயர் சபைகளான மஜ்லிஸ் அஷ்ஷுறா மற்றும் நம்பிக்கையாளர் சபையினுடைய   உறுப்பினர்களும், வலயக் கல்வி பணிமனையின் உதவிக் கல்விப் பணிப்பாளர் மற்றும் பாடசாலையினுடைய ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.