யார் தலைவராக வந்தாலும் தமிழரசுக் கட்சிக்கோ தமிழ் மக்களுக்கோ எந்த பாதிப்பும் இல்லை- மூத்த ஊடகவியலாளர் இரா.துரைரெட்னம்

தமிழரசுக்கட்சி 75 வருடவரலாற்றைக்கொண்டது. அக்கட்சிக்குமுதல் தடவையாகபோட்டி மூலம் தலைவர் ஒருவரை பொதுச்சபை உறுப்பினர்கள் தெரிவு செய்ய உள்ளனர்.

இதுவரைகாலமும் தமிழரசுக்கட்சியின் உயர் மட்டஉறுப்பினர்களே தங்களுக்குள் ஒருவரை தெரிவு செய்து பொதுச்சபையில் அறிவிப்பார்கள். கீழ் மட்டத்தில் உள்ள பொதுச்சபை உறுப்பினர்களின் விருப்பங்கள் அங்கே பிரதிபலிப்பதில்லை.

ஆனால் இம்முறை வேட்புமனுக்கள் கோரப்பட்டு அவர்களில் ஒருவரை பொதுச்சபை உறுப்பினர்கள் தெரிவு செய்ய உள்ளனர்.

இலங்கையில் உள்ளதமிழ் கட்சிகள் எவற்றிடமும் இல்லாத ஜனநாயக பண்பு தமிழரசுக்கட்சியிடம் இருப்பது பாராட்டிற்குரியது.

ஆயுதக் குழுக்களான ஈ.பி.டி.பி, ரி.எம்.வி.பி, ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் ரெலோ என அனைத்துக் கட்சிகளிடம் இந்த ஜனநாயக பண்புகிடையாது. ஈ.பி.டி.பிக்கு டக்ளஸ் சாகும் வரைஅவர்தான் தலைவர். ரி.எம்.வி.பிக்கு பிள்ளையான் தான் சாகும்வரை தலைவர். இதுபோன்றுதான் ஏனைய ஆயுதக் குழுக்களின் நிலமை.

அகில இலங்கைதமிழ் காங்கிரஸ் கட்சிக்கு கஜேந்திரகுமார்தான் சாகும் வரை தலைவர்.

இந்நிலையில் தான் வடக்குகிழக்கில் மிகப்பலம் பொருந்தியகட்சியாக இருக்கும் தமிழரசுக் கட்சிக்கு தலைவர் தெரிவு நாளை சனிக்கிழமை நடைபெற இருக்கிறது.
துலைவராக சுமந்திரனோ அல்லது சிறிதரனோஒருவர் தெரிவுசெய்யப்படுவார்.

யார் தலைவராக வந்தாலும் தமிழரசுக் கட்சிக்கோ தமிழ் மக்களுக்கோ எந்த பாதிப்பும் இல்லை.

தமிழ் தேசியம் பாதிக்கப்படும் என , யோகேஸ்வரன் கூறுவது அவரின் அரசியல் அறிவீனமாகும்.

பாரம்பரிய கட்சியான தமிழரசுக் கட்சியை கட்டுக்கோப்புடன் வழிநடத்தக் கூடிய தலைவர் ஒருவர் தெரிவு செய்யப்படுவதே காலத்தின் கட்டாயமாகும்.