பல்கலைக்கழக கல்வியினை தொடர முடியாமல் சிரமப்பட்ட மாணவிக்கு உதவி வழங்கி வைப்பு

-நிந்தவூர் நிருபர் யுசைல்-

பல்கழைக்கழக கல்வியினை தொடர முடியாமல் சிரமப் பட்ட ஏழை மாணவியின் முழுச் செலவீனங்களையும்   அல் பஷாயிர் அமைப்பு பொறுப் பேற்றது.

முதற் கட்டமாக இரண்டு இலட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் பெறுமதியான பணம் கையளிக்கப்பட்டது.

M.J.M Juzail. 17-01-2024(புதன் கிழமை) அல் ஹம்துலில்லாஹ்! மேற்படி கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் அல் பஷாயிர் அமைப்பிற்கு உத்தியோகபூர்வ முகவரி இடப்பட்ட நிலையில் கடிதம் ஒன்று   கிடைக்கப்பெற்றது.

அந்த வகையில் நிந்தவூர் 05ம் பிரிவினைக் சேர்ந்த இம் மானவி கடந்த 20 வருடங்களாக தனக்கு தந்தையின் அரவணைப்பு இல்லை எனவும் தற்பொழுது வீட்டில் தாயுடன், தாயினுடைய கைத்தொழிலை(அப்பம் சுடுதல்)தொழிலை வருமானமாக மாத்திரம் நம்பி தற்கால சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும், கடந்த காலங்களில் பல கஸ்டங்களைத் தான்டி வறுமையுடன் தனது கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு, தற்போது ஒலுவில் தென் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட நிலையில் தற்போதய பொருளாதார நெருக்கடியினாலும் தாயினுடைய சுகயீனம் காரணமாக வீட்டில் சுய தொழிலை தன்னுடைய தாயினால் மேற்கொள்ள முடியாமல் சிரமப்படுவதாகவும்,அதனால் தன்னுடைய கல்வி நடவடிக்கையை மேற்கொண்டு தொடர முடியாமல் பெரும் கஷ்டத்தினை எதிர்நோக்குவதாக விரிவான முறையில் எமக்கு ஒரு கடிதம் ஒன்றினை தனது குடும்ப நிலை தொடர்பாக இம்மானவி எழுதியிருந்தார். அந்த வகையில் இது தொடர்பாக உடன் விரைந்து இம்மானவியின் வீட்டிற்கு நேரடியாகச் சென்று குடும்ப நிலவரத்தை அறிந்து கொண்ட எமது அமைப்பினர் நிச்சயமாக உதவுவதற்கு தகுதியான குடும்பம் என அடையாளம் படுத்தப்பட்டதற்கினங்க இம்மானவியின் பல்கலைக்கழக கல்வி முடியும் வரை அனைத்து செலவீனங்களையும் எமது அமைப்பினூடாக செலுத்துவதாக வாக்குறுதியளித்தோம். அந்த வகையில் இம்மானவியின் தாயினுடைய கைத்தொழில் மற்றும் நாளாந்த குடும்ப செலவீனங்கள், அத்தோடு இம்மானவியின் கல்வி நடவடிக்கைகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் இன்னும் தாயின் உடைய கைத்தொழிலுக்கு தேவையான ஏனைய பொருட்கள் அனைத்தையும் கொள்வனவு செய்வதற்காக சுமார் 240000/= பணம் வழங்கப்பட்டது