
200 இற்கும் மேற்பட்டோர் பட்டினியால் உயிரிழப்பு
எத்தியோப்பியாவின் டிக்ரே (Tigray) பகுதியில் கடந்த ஆண்டு ஜூலை முதல் 200 க்கும் மேற்பட்டோர் பட்டினியால் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில் 47 சதவீதமானோர் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன், டிக்ரே (Tigray) பகுதியில் வாழும் 89% மக்களுக்கு தற்போது உணவு உதவி தேவைப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
