புதிய மாற்றுதிறனாளிகளை தொழில் பயிற்சி நிலையங்களுக்கு அனுமதித்தல்

திருகோணமலை மாவட்டத்தில் 2023 நடைபெற்ற தொழில் பயிற்சி நிலையங்களுக்கான நேர்முக பரீட்சையில் தெரிவு செய்யப்பட்ட மூதூர் மற்றும் கிண்ணியா பகுதிகளிலுள்ள செவிபுலன் குறைபாடு உடைய இரண்டு மாற்றுத்திறனாளிகளை கண்டியில் அமைந்துள்ள கட்டவெல தொழில் பயிற்சி நிலையத்திற்கு நேற்று செவ்வாய்க்கிழமை திருகோணமலை மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் வழிகாட்டுதலுக்கிணங்க திருகோணமலை மாவட்ட செயலக சமூக சேவைகள் பிரிவினால் நேரடியாக கொண்டு சென்று உட்சேர்க்கப்பட்டனர்.

இதில் சமூக சேவைகள் மாவட்ட இணைப்பாளர் த.பிரணவன், அங்கவீனமுற்ற தேசிய செயலகத்தின் மாவட்ட இணைப்பாளர் ம.துவாரகன் மற்றும் பிரதேச செயலக சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.