
சிறுவன் உயிருக்கு எமனாக வந்த மாஞ்சா நூல்
இந்தியாவின் மத்தியபிரதேசம் பகுதியில் மாஞ்சா நூல் கழுத்தை வெட்டியதில் 7 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது பட்டத்தில் கட்டப்பட்டிருந்த மாஞ்சா நூல் கழுத்தில் சிக்கியதால் குறித்த சிறுவன் படுகாயமடைந்துள்ளார்.
இதனையடுத்து சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
