உடல் எடைகுறைய வேண்டுமா? உங்களுக்கான எளிய வழி

ஆண், பெண் என அனைவருக்கும் உடல் எடை அதிகரிப்பது என்பது தற்போது இளம் வயதிலேயே ஏற்படக்கூடிய பிரச்சினையாக உள்ளது.

உடல் எடை அதிகரிப்பதற்கு தற்போதைய வாழ்க்கை நிலை, உணவு பழக்கவழக்கம், ஹார்மோன்களின் செயற்பாடு, உடற்பயிற்சி செய்யாமை, தூக்க நேரம், என பல காரணங்கள் உண்டு.

தற்போதைய காலகட்டத்தில் அனைவருமே வேலை வேலை என்று இயந்திர வாழ்வை வாழ்கின்றோம்.இதில் உடற்பயிற்சி செய்வதற்கு என தனியான நேரம் ஒதுக்குவது என்பது அனைவராலும் முடியாது. உடல் எடையை குறைக்க விரும்பாதவர்கள் இருக்க முடியாது.

ஒவ்வொரு முறையும் உடல் எடையை குறைக்க பல முயற்சிகளை எடுப்போம்.ஆனால் அதை முறையாக பின்பற்ற முடியாமல் பாதியில் கைவிட்டு விடுவோம்.

எனவே வீட்டிலிருக்கும் இயற்கையான பொருட்களான தேன், எலுமிச்சை போன்றவற்றை வைத்து உடல் எடையை எவ்வாறு குறைப்பது என பார்க்கலாம்.

இயற்கையாகவே கிடைக்கும் தேனுக்கு பசியைக் கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் உள்ளது. இதனால் அதிகப்படியாக நீங்கள் உணவு உட்கொள்வதைத் தடுக்கிறது. உணவுக்கு முன்பும் உணவுக்கு பின்னரும் பசி உணர்வை கட்டுப்படுத்துகிறது, உணவால் அதிக எடை உண்டாவதை இது தடுக்கிறது.

தினமும் காலையில் ஒரு டம்ளர் வெந்நீரில் இரண்டு கரண்டி தேன் மற்றும் இரண்டு கரண்டி எலுமிச்சைச்சாறு கலந்து குடிக்கவும்.இது குடித்த அரைமணிநேரம் வரை வேறு எதையும் சாப்பிடக்கூடாது. இவை மூன்றுமே வயிற்றை சுத்தம் செய்யும்.

இரவு படுக்கைக்கு செல்வதற்கு முன்பு ஒரு டம்ளர் நீரில் ஒரு கரண்டி தேன் கலந்து குடித்து வந்தால் அதிக கலோரிகளை எரிக்கும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர உடல் எடையை குறைக்க முடியும்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்