
ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு இளைஞர்கள் கைது
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞர்கள் இருவர் நேற்று ஞாயிற்று கிழமை பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரம், உடையார்கட்டு பகுதிகளை சேர்ந்த 22, 27 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து தேராவில் இராணுவ சிற்றுண்டிச்சாலைக்கு அருகாமையில் விசேட சோதனை நடவடிக்கை மேற்கொண்ட புதுக்குடியிருப்பு பொலிஸார் 2 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர்கள் இருவரை கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின் நேற்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்திய போது கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திற்கு இருவரையும் அனுப்பியுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
