
தீக்கிரையான மீன் வாடி
புத்தளம் உடப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாரிபாடு கிராமத்தில் உள்ள மீன்வாடி நேற்று ஞாயிற்று கிழமை இரவு 8.00 மணியளவில் திடீரென தீ பற்றி எரிந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
மீனவர்கள் தொழில் முடிந்து வீட்டுக்குச் சென்ற பின்னர் அந்த வாடியில் காவலாளி மட்டுமே இருந்துள்ளார். இதன் போது அந்த மீன்வாடி திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதுடன், அருகில் உள்ளவர்கள் உடனடியாக அங்கு சென்று தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
எனினும், தீயினால் குறித்த மீன்வாடி முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், அந்த வாடியில் இருந்த பல இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் தீக்கரையாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக விசாரனைகளை உடப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
