தீர்ப்பளித்த பெண் நீதிபதியை தாக்கிய குற்றவாளி

நெவாடாவில் உள்ள லாஸ் வேகாஸ் நீதிமன்றத்தில் பெண் நீதிபதியை குற்றவாளி ஒருவர் தாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மூன்று குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்ட   டெப்ரா ரெட்டன் (30 வயது)  என்ற நபருக்கு நீதிபதி மேரி கே.ஹோல்தஸ் தண்டனை விதிக்கும் வேளையில், அந்த நபர் நீதிபதியைத் தாக்கியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.