
ஹமாஸ் அமைப்பின் துணைத் தலைவர் உயிரிழப்பு
ஹமாஸ் அமைப்பின் துணைத் தலைவர் சலே அல்-அரூரி (Saleh al-Arouri) இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
லெபனான் தலைநகர் பெய்ரூட் (Beirut) மீது இஸ்ரேல் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலின் போது அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
