
தன்னை கடித்த எலியை பதிலுக்கு கடித்து பழிவாங்கிய மாணவி : எலி உயிரிழப்பு
தன்னை கடித்த எலியை பதிலுக்கு கடித்து மாணவி ஒருவர் எலியை பழிவாங்கிய சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
சீனாவில் பல்கலைக்கழக மாணவி ஒருவரின் விரலை எலி ஒன்று கடித்துள்ளது.
இந்தநிலையில் தனது விரலை கடித்த எலியை பலிவாங்கும் நோக்கில் குறித்த மாணவி அந்த எலியை திருப்பிக் கடித்துள்ளார்.
இதன் காரணமாக குறித்த எலி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவி தற்போது நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
