உக்ரைன் மீது ரஷ்யா ஒரே நேரத்தில் பல ஏவுகணை தாக்குதல்

தற்போது ரஷ்ய தாக்குதல்களால் உக்ரைனில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நேரத்தில் பல ஏவுகணைகள் உக்ரைன் மீது ஏவப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த தாக்குதலில் 160க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ஒரே நேரத்தில் இவ்வளவு ஏவுகணைகள் வீசப்பட்டதை இதற்கு முன்பு பார்த்ததில்லை என்று உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.

தாக்குதல்களுக்கு ரஷ்யா ஹைப்பர்சோனிக், க்ரூஸ் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.