கடற்கரையை தாக்கிய 20 அடி உயர அலை : இருபதுக்கும் மேற்பட்டோர் அலையில் அடித்து செல்லப்பட்டனர்

பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட பலத்த புயல் காரணமாக கலிபோர்னியா கடற்கரையை இருபது அடி உயர அலை தாக்கியுள்ளது.

இருபதுக்கும் மேற்பட்டோர் அடித்துச் செல்லப்பட்டதாகவும், எட்டு பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அடுத்த சில நாட்களில் 15 முதல் 20 அடி வரை அலைகள் எழும் அபாயம் இருப்பதால், வென்ச்சுரா கடற்கரையில் திட்டமிடப்பட்ட புத்தாண்டு நிகழ்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

புவி வெப்பமடைதல் மற்றும் பனிக்கட்டிகள் உருகுவதால் கலிபோர்னியாவில் கடல் மட்டம் பல ஆண்டுகளாக உயர்ந்து வருவதாக விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.