சீனாவின் முன்னாள் கடற்படைத் தளபதி புதிய பாதுகாப்பு அமைச்சராக நியமனம்

சீனாவின் முன்னாள் கடற்படைத் தளபதி டோங் ஜுன் புதிய பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

டோங் ஜுன் இற்கு தற்போது அறுபத்தி இரண்டு வயது.

கடந்த அக்டோபரில்,  முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் லி ஷாங்ஃபு தனது பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்த பதவி நீக்கத்திற்கான காரணத்தை சீன அரசு தெரிவிக்கவில்லை, கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் இருந்து அவர் பொது வெளியில் தோன்றவில்லை என்று வெளிநாட்டு செய்திகள் தெரிவித்தன.

இதேவேளை,  சீனாவில் வேறு சில முக்கிய பதவிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.