கணவரை சங்கிலியால் கட்டி ஆணுறுப்பை வெட்டிய மனைவி
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கணவரின் கை கால்களை செயினால் கட்டி வைத்து மனைவி ஒருவர் அவரது ஆணுறுப்பை வெட்டி எடுத்துள்ளார்.
அதியபாயா நகரில் 39 வயதுடைய கணவனுடன் மனைவி வசித்து வந்த நிலையில் 15 வயதுடைய உறவுக்கார சிறுமியுடன் கணவன் பாலியல் உறவு வைத்து வந்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மனைவி, கணவின் கை மற்றும் கால்களை சங்கிலியால் கட்டி வைத்து விட்டு, பின்னர் அவரது ஆணுறுப்பை கத்தியால் வெட்டி எடுத்துள்ளார். இதையடுத்து வெட்டி எடுக்கப்பட்ட ஆணுறுப்பை செல்போனில் போட்டோ எடுத்துக் கொண்ட பின்னர், அதனை கழிவறைக்குள் வீசி விட்டு பொலிஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார்.
இதையடுத்து அவர் மீது கொலை முயற்சி வழக்கை பொலிஸார் பதிவு செய்து விசாரணைகளின் போது ஆணுறுப்பை கழிவறையில் எதற்காக புதைத்தீர்கள் என்று கேட்டதற்கு, அதனை மீண்டும் ஆபரேஷன் மூலம் ஒட்ட வைத்து விட முடியும். இதனை தடுக்கத்தான் கழிவறைக்குள் வீசினேன் என்று அந்த மனைவி பதில் அளித்துள்ளார்.
ஆணுறுப்பை இழந்த கணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை குறித்த தகவல்கள் ஏதும் வெளிவரவில்லை.
