சீனாவின் Xiaomi நிறுவனம் அறிமுகம் செய்துள்ள மின்சார கார்
உலகின் முன்னணி ஸ்மார்ட் போன் தயாரிப்பாளரான சீனாவின் Xiaomi நிறுவனம் மின்சார காரை நேற்று வியாழக்கிழமை அறிமுகம் செய்துள்ளது.
இந்த காருக்கு Xiaomi SU7 என பெயரிடப்பட்டுள்ளது, Speed Ultra என்ற சொல் சுருக்கப்பட்டு SU7 எனப் பெயரிடப்பட்டுள்ளது.
அடுத்த 15-20 ஆண்டுகளில் உலகின் முதல் 5 கார் உற்பத்தியாளர்களுடன் இணைவதே தனது இலக்கு என்று Xiaomi நிறுவனம் தெரிவித்துள்ளது.
