
100 பில்லியன் அமெரிக்க டொலர்களை சம்பாதித்த உலகின் முதல் பெண்
பிரான்சுவா பெட்டன்கோர்ட் மேயர்ஸ், 100 பில்லியன் அமெரிக்க டொலர்களை சம்பாதித்த உலகின் முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
Bloomberg Billionaire Index வெளியிட்டுள்ள அறிக்கைபடி, நேற்று வியாழக்கிழமை இவரது சொத்து மதிப்பு 100 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
70 வயதான பிரான்சுவா பெட்டன்கோர்ட் மேயர்ஸ் (Francois Bettencourt Meyers) உலகின் பணக்காரர்களில் 12வது இடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
