மட்டக்களப்பில் பிரபல பாடசாலை மாணவன் உட்பட 3 இளைஞர்கள் போதைப்பொருளுடன் கைது

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கற்கும் மாணவன் உட்பட 3 இளைஞர்கள் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யுக்திய போதையொழிப்பு திட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட குறித்த இளைஞர்களிடமிருந்து ஐஸ் போதை பொருள் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு நகரிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்விப் பொதுத் தராதர தர உயர் தரத்தில் கல்வி பயிலும் மாமாங்கம் பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவன் போதைப் பொருளுக்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

மேலும் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது பெரிய உப்போடை மற்றும் இருதயபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 22 மற்றும் 23 வயதுடைய இரு இளைஞர்கள் ஐஸ் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.