இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அறிக்கையின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது.

இதற்கமைய, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 319 ரூபாய் 14 சதமாக பதிவாகியுள்ளது.

அத்துடன், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 328 ரூபாய் 87 சதமாக பதிவாகியுள்ளது.