
இந்த வருடம் போதைப்பொருள் பாவனையால் 237 பில்லியன் ரூபா நஷ்டம்
இந்த வருடம் போதைப்பொருள் பாவனையால் 237 பில்லியன் ரூபா சுகாதார மற்றும் பொருளாதார சேதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கையின் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் ஆலோசகர் புபுது சுமணசேகர தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி நிதியத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
அண்மையில் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்ட மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் ஆலோசகர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் அரசு மது விற்பனையால் கிடைக்கும் வருமானத்தை விட மது அருந்துவதால் ஏற்படும் விளைவுகளுக்கே அதிகம் செலவிடுகிறது.
