
யாழ் மாவட்டத்தில் ஒரு வாரத்திற்குள் 3 டெங்கு மரணங்கள் பதிவு
யாழ் மாவட்டத்தில் ஒரு வாரத்திற்குள் 3வது டெங்கு மரணம் பதிவாகியுள்ளது
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணம் – சால்வெளி பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
முன்னதாக, யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 11 மாத குழந்தையும், யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 25 வயதுடைய யுவதியும் டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மட்டும் 136 டெங்கு நோயாளர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் வேகமாகப் பரவிவரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகளும் மக்களும் சமமாகச் செயற்பட வேண்டுமென இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
