
கொரியாவில் பிரபல டிக்டொக் நட்சத்திரம் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு
கொரியாவில் பிரபல டிக்டொக் நட்சத்திரமான சியோ வோன் ஜியோங் (Seo Won Jeong) மீது பாலியல் வன்கொடுமை குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சியோ வோன் ஜியோங் 27 வயது இளைஞன் மற்றும் கொரியாவில் மிகவும் பிரபலமான வுமைவுழம படைப்பாளர்களில் ஒருவராகவும், மிகவும் கவர்ச்சிகரமான பிரபலமாகவும் உள்ளார்.
சியோ வோன் ஜியோங் உலகம் முழுவதும் ”Mama Guy” என்று அறியப்பட்ட ஒரு பிரபலம் ஆவார்
மேலும், அவருக்கு தற்போது சுமார் 55.6 மில்லியன் பின்தொடர்பவர்கள் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
