பிரச்சினைகளுக்கு தீர்வு காணாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கை : அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணாவிட்டால் அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே, தமது மத்திய குழுவும் ஏகமனதாக இதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.