முன்னாள் சுகாதார செயலாளர் உட்பட சந்தேக நபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த உள்ளிட்ட 6 பேர் மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபரை இன்று புதன்கிழமை மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தரமற்ற இம்யுனோக்ளோப்யுளின் மருந்து இறக்குமதி தொடர்பில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

அத்துடன், தரமற்ற இம்யுனோக்ளோப்யுளின் மருந்து இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் சுகாதார அமைச்சின் மருந்து வழங்கல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் கபில விக்ரமநாயக்க உள்ளிட்ட 04 பேரும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது..

தொடர்புடைய செய்தி

இம்யூனோகுளோபுலின் மோசடி : முன்னாள் சுகாதார செயலாளர் உட்பட சந்தேக நபர்கள் நீதிமன்றில் முன்னிலை