
யாழ் கடற்கரையில் கரையொதுங்கியுள்ள மர்ம பொருள்
-யாழ் நிருபர்-
யாழ் வடமராட்சி கிழக்கு உடுத்துறை கடற்கரையில் கப்பல் போன்ற அலங்கரிக்கப்பட்ட உருவத்துடன் இரதம் ஒன்று இன்று புதன்கிழமை கரையொதுங்கியுள்ளது.
இது மியன்மார் நாட்டில் திருவிழா நிகழ்வுகளில் பயன்படுத்துவதற்காக வடிவமைப்பார்கள் என கூறப்படுகிறது.
இருப்பினும் இது எவ்வாறு வந்தது? இது உண்மையிலேயே என்ன? என்ற விடயங்கள் இதுவரை வெளியாகவில்லை.
