பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் ஹெரோயினுடன் கைது

மேல் மாகாண புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் ஹெரோயினுடன் கிரிதிவெல பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கிரிதிவெல பிரதேசத்தை சேர்ந்த இவர் நேற்று செவ்வாய்க்கிழமை 2 கிராம் 350 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது