கொவிட் தொற்றின் விளைவாக மாரடைப்பு ஏற்படும் அபாயம் : எச்சரிக்கை
கொவிட் தொற்று காரணமாக உலகளாவிய ரீதியில் மாரடைப்பு நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் குழு கருத்து தெரிவிக்கிறது.
இந்த கருத்து ஸ்டெம்செல் செயல்முறைகளில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டது.
கொரோனா வைரஸின் தாக்கத்தால் ஏற்படும் நீண்டகால சிக்கல்கள் எதிர்காலத்தில் அதிக மாரடைப்புகளுக்கு வழி வகுக்கும் என ஜப்பானிய நிபுணர்கள் குழு ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
எவ்வாறாயினும், உலகளாவிய தொற்றுநோய் சூழ்நிலையை எதிர்கொண்ட பின்னர், கேள்விக்குரிய வைரஸின் செயல்பாட்டைப் பற்றிய விரிவான ஆய்வு இல்லாமல் அத்தகைய கருத்தை வெளிப்படுத்த முடியாது என்று சில அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, Covid-19 – JN One இன் உப வகை உலகின் பல நாடுகளில் பரவியுள்ள போதிலும், அது இலங்கையில் குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்தும் என சுகாதார அமைச்சு அண்மையில் தெரிவித்திருந்தது.
தற்போதைய தரவுகளின்படி, இலங்கையர்களின் உயிருக்கு ஆபத்தான சிக்கல்கள் குறைவாக இருந்தாலும், சமீபத்திய உலகளாவிய நிலைமைகள் குறித்து சுகாதார அமைச்சு விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
