
இம்யூனோகுளோபுலின் மோசடி : முன்னாள் சுகாதார செயலாளர் உட்பட சந்தேக நபர்கள் நீதிமன்றில் முன்னிலை
சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோபுலின் நோய் எதிர்ப்பு மருந்துகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த இன்று புதன்கிழமை மீண்டும் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
எவ்வாறாயினும், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மருத்துவ வழங்கல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கபில விக்ரமநாயக்க வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதால் அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவில்லை.
சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜானக ஸ்ரீ சந்திரகுப்த, மருத்துவ வழங்கல் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் சாந்தினி சொலமன், அதன் கணக்காளர் நேரன் தனஞ்சய ஆகியோருடன், தொடர்புடைய தடுப்பு மருந்துகளை இறக்குமதி செய்த நிறுவனத்தின் உரிமையாளர் சுகத் ஜானக பெர்னாண்டோ மற்றும் பங்கு கட்டுப்பாட்டாளர் சுஜித் குமார ஆகியோரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் நேற்று முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது
