மட்டக்களப்பில் புயலுடன் கூடிய மழை : மரங்கள் சரிந்து விழுந்து பலத்த சேதம்

-என்.கிட்சாயினி-

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று புதன்கிழமை காலை ஏற்பட்ட பலத்த காற்றில் மாவட்டத்தின் பல பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் தொடக்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் கனமழை பெய்து வருகின்றது.

இந்நிலையில் இன்று காலை மழையுடன் கூடிய பலத்த காற்று வீசியது. இதன்போது மட்டக்களப்பு வெல்லாவெளி வேத்துச்சேனை பகுதியில் மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டு வீடுகளின் மீது விழுந்து இரண்டு வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளது.

மேலும் மட்டக்களப்பு நகர் பகுதியை அண்டிய பகுதிகளிலும் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதுடன் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.