மேலும் 200 பேருந்துகள் இணைக்கப்படவுள்ளது

இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகளுக்கான ஒன்லைன் பயணிகள் இருக்கை முன்பதிவு சேவையில் 200 பேருந்துகள் இணைக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.

sltb.eseat.lk என்ற இணையத்தளத்திற்கு சென்று பயணிகளின் ஆசனங்களை முன்பதிவு செய்ய முடியும்.

அதன்படி, இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தற்போது வரை கிட்டத்தட்ட 80,000 பயணிகள் இருக்கைகள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் கிட்டத்தட்ட மூன்றரை கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

1315 என்ற எண்ணின் மூலம் பயணிகளின் ஆசனங்களை முன்பதிவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.