திரிபோஷாவினால் குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் உயிருக்கு ஆபத்து
கர்ப்பிணித் தாய்மார்கள், சிறு பிள்ளைகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் திரிபோஷா தொடர்பில் முன்னிலை சோஷலிஸக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
திரிபோஷாவில் உள்ள நச்சு இரசாயனங்களை இரட்டிப்பாக்க அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாக அங்கு அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதன்படி, திரிபோஷ உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் சோளத்தில் இருக்கக்கூடிய ‘அப்லாடாக்சின்’ அளவை இரட்டிப்பாக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவின்படி, திரிபோஷாவில் உள்ள ‘அப்லாடாக்சின்’ அளவு, மக்காச்சோளத்தின் ஒரு பில்லியன் பாகங்களுக்கு 5ல் இருந்து 10 ஆக அதிகரிக்கப்படும்.
‘அப்லாடாக்சின்’ இரசாயனத்தை உட்கொள்வதன் மூலம் கல்லீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என்பதாலேயே புற்றுநோயாக உருவாகின்றது
1980ஆம் ஆண்டின் 26ஆம் இலக்க உணவுச் சட்டத்தில் உரிய அமைச்சரவை தீர்மானத்துடன் திருத்தம் கொண்டு வரப்படவுள்ளதாகவும், இதனால் குழந்தைகள், தாய்மார்கள் உட்பட அனைவரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
