
பேக்கரி பொருட்களின் விலை அதிகரிப்பு?
எதிர்வரும் முதலாம் திகதியில் இருந்து வற் என்ற பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்படவுள்ளமையினால் பேக்கரி தொழிற்துறையில் உள்ளவர்கள் வெகுவாக பாதிப்படைவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வரி அதிகரிக்கப்பட்டாலும் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையை அதிகரிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
தற்போது 15 சதவீதமாக காணப்படுகின்ற வற் வரியின் ஊடாக பேக்கரி தொழிற்துறை பாதிப்படைந்த நிலைமையில் உள்ளது.
இந்தநிலையில் அதனை 18 சதவீதமாக அதிகரிப்பது மேலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
தற்போதைய நிலையில் புதிய வரி திருத்தத்துக்கு அமைய பேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிக்கப்படுமாயின் நுகர்வோர் வெகுவாக பாதிக்கப்படுவார்கள்.
அத்துடன் பேக்கரி உற்பத்திகளை கொள்வனவு செய்யும் நுகர்வோரின் எண்ணிக்கையும் வெகுவாக வீழ்ச்சியடையும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
