திருகோணமலையிலும் சுனாமி நினைவு நாள் அனுஷ்டிப்பு

-திருகோணமலை நிருபர்-

சுனாமியின் 19 ஆவது நினைவு நாள் திருகோணமலையில் இன்று செவ்வாய்க்கிழமை தமிழர் பேரவையால் நினைவு கூரப்பட்டது

இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ சமயப் பிரார்த்தனைகளோடு நிகழ்ச்சிகள் தொடங்கியதுடன் கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப் பட்டது

தமிழரசுக்கட்சியின் திருகோணமலை மாவட்டக்கிளைத் தலைவர் திரு சண்முகம் குகதாசன் பிரதான சுடரினை ஏற்றி வைத்தார்

தமிழர் பேரவை சார்பில் திரு ஜெரோம் , தொடக்க உரையாற்றினார் தமிழர் பேரவைத் தலைவர் .திரு ரமேஷ் நிக்க லஸ் நன்றியுரை ஆற்றினார்

நகர சபைச் செயலாளர் திரு ராஜசேகர் இதிரு எஸ். குகதாசன், திருமதி ஆஷா ஆகியோர் உரை ஆற்றினார்