மட்டக்களப்பு சிறைச்சாலையில் 46 கைதிகள் விடுதலை

நத்தார் திருநாளை முன்னிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 2 பெண் கைதிகள் உட்பட 45 கைதிகள் இன்று திங்கட்கிழமை காலை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டதாக சிறைச்சாலை அத்தியட்சகர் என்.பிரபாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் என்.பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற கைதிகள் விடுதலை செய்யப்படும் நிகழ்வில் பிரதம ஜெயிலர், மதகுருமார்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

சிறு குற்றம் புரிந்த தண்டணைப் பணம் செலுத்தாத கைதிகளே இன்று விடுதலை செய்யப்பட்டனர்.