
இன்றைய நாணயமாற்று விகிதங்கள்
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அறிக்கையின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி இன்று வெள்ளிக்கிழமை சற்று வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது.
இதற்கமைய, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 321 ரூபாய் 46 சதமாக பதிவாகியுள்ளது.
அத்துடன், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 331 ரூபாய் 30 சதமாக பதிவாகியுள்ளது.

