10 ஏக்கர் நிலத்தில் கஞ்சா பயிரிட்ட நபர் கஞ்சா செடிகளுடன் கைது

-பதுளை நிருபர்-

300 கஞ்சா செடிகளுடன் நபர் ஒருவர் மஹகளுகொல்ல பொலிஸாரினால் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

மஹகளுகொல்ல சுகலாதேவி கால்வாய் பகுதியில் கஞ்சா பயிரிடப்பட்டுள்ளதாக மஹகளுகொல்ல பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய, குறித்த பகுதியில் சுற்றி வளைத்து தேடுதல் மேற்கொண்ட போது,  சுமார் 10 ஏக்கர் நிலம் பரப்பில் 5அடி உயரம் உள்ள 300 கஞ்சா செடிகளுடன் பசறை அமுனிவத்தை பகுதியை சேர்ந்த 37வயதுடைய நபர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

குறித்த சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் இன்று வெள்ளிக்கிழமை சந்தேக நபரை சியம்பலாண்டுவ நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்