
இன்று முதல் நீண்ட விடுமுறை
அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் இன்று வெள்ளிக்கிழமையுடன் நிறைவு செய்யப்படவுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் 04ஆம் திகதி முதல் கல்வி பொது தராதர உயர் தரப்பரீட்சை இடம்பெறவுள்ளதன் காரணமாக, பாடசாலைகளுக்கு நீண்ட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகளுக்காக, பாடசாலைகள் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி வியாழக்கிழமை மீள திறக்கப்படும் என கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
