
பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்
அடுத்த மாதம் 4ஆம் திகதி இடம்பெறவுள்ள கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள விண்ணப்பதாரர்களுக்கான அனுமதி பத்திரத்தில், மொழி, பிறந்த திகதி மற்றும் பெயர் என்பவற்றை இணையவழி ஊடாக திருத்திக்கொள்வதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் நாளை நள்ளிரவு வரை நீடிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
