ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

-பதுளை நிருபர்-

26 கிராம் 760 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பதுளபிடி பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் மேற்கொண்ட போது 15 கிராம் 460 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன் 345000 ரூபாய் பணமும் ,3 கையடக்க தொலைபேசிகளும் , 2 ATM அட்டைகளும் , உந்துருளி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், பிறிதொரு இடத்தில் 11 கிராம் 300 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அத்துடன் 34,25 வயதுடைய இரண்டு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபர்கள் மிக நீண்ட நாட்களாக ஐஸ் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் இருப்பினும் இதுவரையில் கைது செய்ய முடியவில்லை எனவும் இன்று கிடைத்த சரியான இரகசிய தகவலில் பிரகாரமே இவர்களை கைது செய்ய முடிந்ததாகவும் பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபர்களிடம் பல கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் பதுளை நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர் .