
ஐனாதிபதியுடனான சந்திப்பில் பங்கேற்கப் போவதில்லை – சீ.வி.விக்னேஸ்வரன்
ஐனாதிபதி வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் ஐனாதிபதியுடனான சந்திப்பில் தாம் பங்கேற்கப் போவதில்லை என வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது என்ற மிக முக்கியமான விடயம் தொடர்பில் ஜனாதிபதியால் ஏற்கனவே, வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாது, நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி குறித்து கலந்துரையாடுவதன் மூலம் எவ்வித பலனும் ஏற்பட போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் வடக்கு, கிழக்கு தமிழ் கட்சிகளுக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இன்று வியாழக்கிழமை இடம்பெறவுள்ள சந்திப்பில் ஏனைய தமிழ் கட்சிகள் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பானது, இன்று பிற்பகல் 3 மணிக்கு கொழும்பில் இடம்பெறவுள்ளது.
