
கஞ்சா செடிகளுடன் இருவர் கைது
-பதுளை நிருபர்-
கொஸ்லாந்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அளுத்வெல உகந்த பகுதியில் சட்ட விரோதமான முறையில் கஞ்சா பயிரிடுவதாக பண்டாரவளை குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பண்டாரவளை குற்ற தடுப்பு பொலிஸாரினால் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் 2அடி 6அங்குலம் உயரமான 210 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
அத்தோடு இரண்டு சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் அவர்களிடம் இருந்து 6200 கிராம் காய்ந்த கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
28.35 வயதுடைய, மீவேவ சதலக பலகல பகுதியை சேர்ந்த ஒருவரும் அஸ்வெத்தும பொரலுவெவ கொபேகனே பகுதியை சேர்ந்த ஒருவருமாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
சந்தேக நபர்களை பண்டாரவளை நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்
