பெரிய வெங்காயத்தின் விலை : மொத்த வியாபாரிகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள பல வர்த்தகர்கள் பெரிய வெங்காயத்தின் விலையை உயர்த்தும் மோசடியில் ஈடுபட்டு வருவதாக மொத்த வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தை நாளை முதல் ஒரு கிலோ 600 ரூபா என்ற விலையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவு விற்பனை செய்ய தயாராக இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் தற்போது ஒரு கிலோ பெரிய வெங்காயம் மொத்த விலையில் 420 முதல் 600 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படிஇ நுகர்வோர் விவகார அதிகாரசபை இந்த விடயத்தில் தலையிட்டு தீர்வு வழங்குமாறு மொத்த வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.