சலுகையின் கீழ் அழுகிய கோழி இறைச்சி விற்பனை : KFC நிறுவனத்தின் அறிக்கை

KFC நிறுவனத்தின் இலங்கையில் உள்ள நிர்வாகம், அதன் விற்பனை நிலையம் ஒன்றில் சமீபத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் வருத்தம் தெரிவித்ததுடன், முழுமையான விசாரணை நடைபெற்று வருவதாக உறுதியளித்துள்ளது.

KFC இன் ராஜகிரிய விற்பனை நிலையத்தில், “ஒன்றை வாங்குங்கள், ஒன்றை இலவசமாகப் பெறுங்கள்” என்ற சலுகையின் கீழ் அழுகிய கோழி இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக ஒரு வாடிக்கையாளர் புகார் அளித்ததையடுத்து, இந்த விடயம் கடுமையான விமர்சனத்துக்குள்ளானது.

பொது சுகாதார பரிசோதகர்கள் கடையை பரிசோதித்ததோடு, கெட்டுப்போன உணவுகள் விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்ததோடு, அங்கிருந்த பொருட்களை அழிக்கவும் நடவடிக்கை எடுத்தனர்.

இச்சம்பவம் குறித்து பதிலளித்த KFC Sri Lanka  நிர்வாகம், இந்த சம்பவத்தால் ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவித்தது.

தயாரிப்பு மற்றும் சேவையின் தரத்தில் மிக உயர்ந்த தரத்தை நிலைநிறுத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டை வெளிப்படுத்திய நிறுவனம், மிகச்சிறந்த உணவுத் தரத்தை உறுதி செய்வதற்கான கடுமையான நடவடிக்கைகளைக் கொண்டிருப்பதாக உறுதியளித்தது.

முழு அறிக்கை