ஹெரோயினுடன் 51 வயது பெண் கைது

யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை கிழக்கு பகுதியில் போதைப்பொருளுடன் 51 வயதான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் அவரிடமிருந்துதனது ஆடைக்குள் ஹெரோயினை மறைத்து வைத்திருந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து  6 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண் இன்று புதன்கிழமை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.